நான் ஒரு வைத்தியர் ஆனால்

எல்லோருக்கும் சிறுவயதிலிருந்து பெரிய கணவு இருக்கும். அது போல எனக்கும் ஒரு பெருங்கனவு இருக்கிறது. வைத்தியராகி ஏழை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த சமுதாயத்தில் நன்மதிப்பை பெற வேண்டும் என்பது எனது கணவாகும்.

நான் பார்த்த நிஜமான கதாநாயகர்கள் வைத்தியர்கள் தான் உயிர்களை இவர்கள் காப்பாற்றுவதனால் பல கொடிய நோய்களுக்கு இவர்கள் மறுந்து கொடுப்பதனால் இவர்களை தெய்வத்துக்கு சமமாக எல்லோரும் பார்க்கும் போது எனக்கு பிறமிப்பாக இருக்கும்.

என்றாவது ஒரு நாள் நானும் ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பது எனது ஆசை. ஒருவருக்கு உதவி செய்தால் நிறைய அன்பு கிடைக்கும் அது போலவே நிறைய மனிதர்களுக்கு உதவி செய்தால் இன்னும் நிறைய அன்பு கிடைக்கும்.

நான் வைத்தியரானால் நிறைய மக்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்வேன். இங்கே பனக்காரர், ஏழை, உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சமமாக நான் வைத்தியம் செய்வேன்.

சிறந்த மருத்துவ சேவையினை நான் வழங்கினால் இங்கே மக்கள் அணைவரும் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள். இதனால் எம்முடைய நாடு மகிழ்ச்சியான நாடாக மாறும்.

இன்று நாம் கேள்விப்படுகின்றது போல வறுமையினால் நல்ல மருத்துவம் கிடைக்காமல் நம்முடைய நாட்டில் யாரும் இறந்து போக மாட்டார்கள் வைத்திய சேவைக்காக அதிக பணம் செலவழிக்க தேவையுமில்லை. “சிறந்த மருத்துவம் எமது நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் கிடைக்க என்னால் இயன்றதை செய்வேன்”.

மக்களுக்கு நோய்கள் வந்த பின்னர் வைத்தியசாலைக்கு வருவதனை விடவும் நோய் வராமல் தடுத்து ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதனை தெளிவுபடுத்துவேன்.

இவ்வாறு என்னால் முடிந்த சேவைகளை எனது நாட்டுக்காக செய்து மக்களிடம் சிறந்த வைத்தியர் என்ற பெயரை பெறுவேன்.

பாறபட்சம் மோசடிகள் இல்லாத சிறந்த வைத்தியராக எனது நாட்டு மக்களுக்கு நான் சேவையாற்றுவேன் இதுவே எனது கனவு.

Comments